நமக்கொரு பாலகன்
namakkoru paalagan
நமக்கொரு பாலகன் பிறந்தார் நமக்கோர் குமாரன் கொடுக்கப்பட்டார் அதிசயம் அவரது நாமம் மாமிசத்தில் வந்தவரே
1. இறைமனு வேலனாய் கிருபையும் சத்தியம் நிறைந்தவராய் நம்மோடிணைந்தவரே சிறை கிடப்போரை விரைந்து இரட்சிக்கவே நிறையன்பு கொண்டு நினைந்தவரே - நமக்கொரு
2. இளங்கிளை போலவே தழற்நிலந்தனினின்று துளிர்விடும் வேரென வெளிப்படவே ஒளிர்வுடை வேதனின் அருள் மொழியவரே எளியவர் கோலமதேற்றவரே - நமக்கொரு
3. ஆகாயப் பறவையும் அடையுமோர் கூடுண்டு அலைந்திடும் நரிக்குமோர் குழியுமுண்டே அனைத்தையும் வார்த்தையால் வகுத்த விண் சுதனே அவனியில் சாப்பிட மற்றவரே - நமக்கொரு
4. நீதியிலும் சமாதானத்திலும் உயர் இராஐனாய் ஆளுகை செய்திடுவோர் மெல்கிசேதேக்கின் முறை வழி வருவோர் மூலைக்கல்லென்றுமே சபையதற்கே - நமக்கொரு
5. மகிமையும் கீர்த்தியும் புகழ்ச்சியும் துதி மிகு ஆதிபரன் இயேசுவின் நாமத்திற்கே முடிவிடம் வரையும் இடரற நடத்தும் திருவடிதனில் எமைப் படைத்திடுவோம் - நமக்கொரு