நள்ளிரவில் இயேசு
nalliravil yesu
நள்ளிரவில் இயேசு பெத்லகேம் புரியில் நீசக் கோலமதாய் கன்னியில் பிறந்தார் - நாள் அல்லேலூயா மகிமை தேவாதி தேவ சுதன் இரட்சகர் பிறந்தார்
1. ஏனோ இவர்க்கிந்தத் தாழ்மையை மானிடனாய் வரவே தன்னிகரில்லா ராஜனாய் இந்நிலம் ஒளியாய் வந்தார் - நாள்
2. ஆட்கொள்ளும் மா வினை போக்கிடும் ஆட்டுக்குட்டி இவரே அன்பால் தேடி எப்பாவியும் அணைக்க வந்த கோனோ -நாள்
3. ஆளுகையும் அதிகாரமும் தோளில் உடையவரே சரீரம் சபை சிறந்தோங்க சிரசாய் உருவெடுத்தார் - நாள்
4, மரணத்தின் அதிகாரியை மாய்த்திடும் மாவீரனாய் ஜீவனும் அழியாமை யாவுமே ஈந்திட அவதரித்தார் - நாள்
5. புவி முழங்கத் துதி சாற்றுவோம் நவிந்து அவர் புகழை தாழ்த்தியே அவனடி சேவிப்போம் தாவீதின் சேயனிவர்- நாள்