நல்லவரே வல்லவரே நன்மைகள்
nallavarae vallavarae nanmaigal
நல்லவரே வல்லவரே நன்மைகள் செய்தீரே நன்றி ஐயா வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவேன் உயிர் உள்ளவரை உம்மை போற்றிடுவேன்
1. பாவத்திலே நான் மரித்துப்போய் இருந்தேன் மனதும் மாம்சமும் இச்சித்ததை செய்தேன் தேவனே உம் கிருபையாலே இரட்சித்தீரே நன்றி ஐயா
2. பேதை என்னை ஞானியாய் மாற்றினீர் பெலவீனன் என்னை பெலவானாய் மாற்றினீர் பிரபுக்களோடும் ராஜாக்களோடும் உட்காரச் செய்தீரே நன்றி ஐயா
3. தாயைப் போல் தேற்றினீர் உமக்கே ஸ்தோத்திரம் தந்தை போல் தாங்கினீர் உமக்கே ஸ்தோத்திரம் தாழ்வில் இருந்த என்னையும் நீர் தயவாய் நினைத்தீர் நன்றி ஐயா