நல்லவரே உமக்கு நன்றி
nallavarae umakku nandri
நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன் நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன்-2 எனக்காக வந்தீரே நன்றி சொல்கிறேன் ஜீவனையும் தந்தீரே நன்றி சொல்கிறேன்-2
நன்றி சொல்கிறேன் உமக்கு நன்றி சொல்கிறேன்-2-நல்லவரே
1.குப்பையிலே தெரிந்து கொண்டீர் நன்றி சொல்கிறேன் குழந்தையாய் மாற்றி விட்டீர் நன்றி சொல்கிறேன்-2
உயர்ந்தவரே உயர்ந்தவரே உயிரோடு கலந்தவரே-2 உயிர் வாழும் நாட்களெல்லாம் உம்மை பாடுவேன்-2-நல்லவரே
2.அழுக்கான என்னை அழைத்தீர் நன்றி சொல்கிறேன் அன்போடு அணைத்துக்கொண்டீர் நன்றி சொல்கிறேன்-2
பரிசுத்தரே பரிசுத்தரே பாவங்களை சுமந்தவரே-2 உயிர் தந்த இயேசு நாதா உம்மைப்பாடுவேன்-2-நல்லவரே