நல்லவரே சர்வ வல்லவரே
nallavarae sarva vallavarae
நல்லவரே சர்வ வல்லவரே என்னை நாள்தோறும் நடத்துவீரே – 2
1. மனிதர் என்னை கீழே தள்ளினாலும் உம் கிருபையால் என்னை உயர்த்தினீரே
2. நான் நேசித்தவர் என்னை வெறுத்தாலும் உம் அன்பால் என்னை நேசித்தீரே
3. தாழ்வில் என்னை நினைத்தீரே உம் காருண்யத்தால் என்னை அணைத்தீரே
4. சிலுவையில் எனக்காய் மரித்தீரே என் பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
5. இம்மட்டும் என்னை நடத்தினீரே இனிமேலும் என்னை நடத்துவீரே