நல்லவரே எங்கள் இயேசைய்யா
nallavarae engal iyesaiyyaa
நல்லவரே எங்கள் இயேசைய்யா வல்லவரே எங்கள் இயேசைய்யா ஆராதித்து ஆராதித்து மகிழ்ந்திருப்பேன் ஆனந்த சத்தத்தோடே புகழ்ந்திடுவேன்
1. பாவங்களை மன்னித்து என்னில் பாசம் கொண்டீரே பரிசுத்த பாதை தினம் நடத்துகிறீர்
2. ஒவ்வொரு நாளும் நன்மைகளை அள்ளித் தந்திரே ஓயாமல் உம்மை பாட கிருபை தந்தீரே
3. மாசற்ற அன்பினாலே அணைத்துக் கொண்டார் மந்தையாம் சபைதனில் சேர்த்துக் கொண்டீர்
4. பரிசுத்த ஆவியினாலே நிறைத்து விட்டீரே பரலோக வாழ்வினிலே இணைத்து விட்டீரே
5. நீதியின் வலக்கரத்தாலே தாங்குகிறீர் நித்தமும் நல் வழி நடத்துகிறீரே
6. புல்லுள்ள இடங்களில் மேய்க்கும் நல்ல மேய்ப்பரே அமர்ந்த தண்ணீரண்டை நடத்தும் நேசரே
7. கிருபை வரங்களையும் எமக்கு தந்தீரே கிருபாசனம் செல்ல தகுதி தந்தீரே