நல்லவரே என் இயேசுவே
nallavarae en yesuvae
நல்லவரே என் இயேசுவே நிகரில்லா என் நேசரே-2 நீர் நல்லவர் என்று பாட என் ஆயுள் போதாதே-2-நல்லவரே
1.காணாத ஆட்டைப்போல பாவத்திலே தொலைந்திருந்தேனே பரலோகம் விட்டிறங்கி என்னை நீர் தேடி வந்தீர்-2
தோள் மீது சுமந்து செல்லும் நல் மேய்ப்பரே-நல்லவரே
2.கல்வாரி அன்பை கொண்டு எனக்காய் ஜீவன் தந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த மெய் தேவனே-2
புது வாழ்வு எனக்களித்த என் நல்ல இரட்சகரே-நல்லவரே அல்லேலூயா அல்லேலூயா