நல்லவர் என் தெய்வம்
nallavar en theyvam
நல்லவர் என் தெய்வம் நல்லவர் சர்வ வல்லவர் என் தெய்வம் வல்லவர் -2 வல்லமையின் பராக்கிரம் நிறைந்தவர் பூமியிலே உயர்ந்தவர் தேவர்களில் எல்லாம் உயர்ந்தவர் மகா உன்னதமானவர்
சர்ப்பங்களும் தேள்களும் எந்தன் காலின்கீழ் வல்லமையும் வரங்களும் என் தலையின் மேல் -2 தந்து என்னை அனுதினம் நடத்துகின்ற சர்வ வல்ல தேவன் அவர் எந்தன் தெய்வமே -2 சர்வ வல்ல தேவன் அவர் எந்தன் தெய்வமே
உலகத்தின் முடிவு பரியந்தமும் என்னோடு இருப்பேன் என்று சொன்னவர் -2 என்னோடு இருந்து அவர் செய்திடும் காரியம் பயங்கரமாயிருக்கும் -2 காரியம் பயங்கரமாயிருக்கும்
செங்கடலை பிளந்திடும் விசுவாசமும் யோர்தானை கடந்திடும் வல்லமையும் -2 கோலியாத்தை வீழ்த்திடும் அபிஷேகமும் ஆவியின் பட்டயமும் எனக்கவரே -2 ஆவியின் பட்டயமும் எனக்கவரே