நல்லாயன் இயேசு
nallaayan yesu
நல்லாயன் இயேசு வென்னும் நாமத்தில் வந்துதித்தார் நலிந்தோரை நானிலத்தை நயந்து இரட்சிக்கவே பிறந்தார்
1. ஆடுகள் போல வழிதப்பி அலைந்து தேடுவார் இன்றியே மாள்பவர் நாடியே நானிலம் தேடியே வந்துமே மீட்கவே நாட்டம் கொண்ட நல் மேய்ப்பரே - நல்லா
2. சத்தியம் கிருபையுமாய் உதித்தவரே நித்திய பிதாவென்னும் நாமமுளளோர் சேருமே பெத்தலை பாருமிப்பாலனை தீர்ப்பாருன் இதயத்தின் தாகந்தனை - நல்லா
3. இரட்சகர் இயேசுவே வந்தார் இத்தரையில் மாட்சிமை சுரர் துதி துறந்தவர் என்னவொரு அன்பிதே மானிடர் மீதிலே தன்னிகரற்ற பாலகன் பிறந்தார் - நல்லா
4. சரீரமும் சபையின் அரும் சிரசாய் பாரினில் ஆகிடவே பிறந்தார் சுத்த ராய் அன்பிலே தம்முன்பில் நிறுத்த சித்தமும் சிந்தையதில் கொண்டவரே - நல்லா
5. வியாதியும் வேதனை துன்பமும் சுமந்த பாவ நிவாரண பாடியவர் வலியும் இவரே சத்தியமும் இவரே அழிவில்லா ஜீவன் அளிப்பவரே - நல்லா