நல்ல உள்ளம் தரவேண்டும்
nalla ullam tharavendum
நல்ல உள்ளம் தரவேண்டும் நாதா உம்மை நன்றியோடு பாடித் துதிக்க தேவா துதிகளிலே வாசம் செய்யும் மூவா உம்மைத் துதித்தாலே இதயம் மகிழும் தேவா
பரிசுத்த தூதர்கள் பணிந்தும்மைத் துதிக்க பரலோகம் மகிமையாய் நிறைந்தமே ஜொலிக்கு கர்த்தா ன் வாக்குகள் என்னிலே பலிக்க சுத்தா ன் பங்கிலே மகிமையாக நிலைக்க
எரிகோ கோட்டைகள் இடிந்துமே விழுந்திட தாகோன் சிலைகளும் பொடிப்பொடியாய் நொறுங்கிட தீமையான எண்ணங்கள் வேரோடு அழிந்திட நன்மையான ஈவுகள் நாள்தோறும் பெருகிட
சத்தியத்தின் பாதையில் நாள்தோறும் நடத்திட நித்தியத்தின் தேவனை நீங்காமல் தொழுதிட பக்தியிலே உண்மையாய் உள்ளம் வளர்ந்திட முக்தியிலே உம்மோடு சேர்ந்துமே வாழ்ந்திட