நல்ல போராட்டம் போராடு
nalla poraattam poraadu
நல்ல போராட்டம் போராடு - யேசு நாதரிலுள்ள விசுவாசம் வைத்தோடு. பொல்லா உலகத்தை நீ விட்டுப் போடு பூரண தேவ பலத்தை மன்றாடு.
1. சத்திய வார்க் கச்சை கட்டு - தேவ சர்வாயுதவர்க்கம் பற்றிக் கைக்கொட்டு சுத்த சுவிசேடப் பட்டயந் தொட்டு தொல்லுல காதிபதியைத் துரத்து.
2. நீதிமார்க் கவசத்தைப் பூட்டு - காலில் ஆயத்த பாதரட்சையைப் போட்டு நடு ராத்திரியில் பத்திரமாயிருந்து பஞ்சைப் பசாசின் பரிவாரம் ஓட்டு.
3. ஜெப தப தூபங்கள் ஏற்று - யேசு சிந்திய செந்நீர் துளிகளைப் பாரு விபரீத சிந்தையேன்? நுP மனந்திரும்பு வேந்தன் கிறிஸ்துவக்கே ஜெயங்கூறு.
4. கர்த்தருன் கவலையைத் தீர்ப்பார் உந்தன் காலடி சற்றும் வழுவாது பார்ப்பார் அர்த்த ராத்திரியில் ஆபத்தில் காப்பார் ஆனந்தப் பதவியில் உன்னையும் சேர்ப்பார்.