நல்ல போராட்டம் போராடு
nalla poraattam poraadu
நல்ல போராட்டம் போராடு எல்லையை நாடு அல்லல் தொல்லை அனுகிடும் நில்லாமல் ஓடு
பாரம் பாவம் தள்ளி இலக்கை நோக்கி நேராய் ஓடு தேவன் நியமித்த ஓட்டம்
பின்னான வை மறந்தே முன்னோக்கியே ஓடு கன்மலை கிறிஸ்துவின் மேல் கண் பதித்து ஓடு
இச்சையை அடக்கி ஓடிடுவாய் இங்கு யாவிலும் உச்சிதமான அழியா கிரீடம் உனக்குண்டு
எச்சமயத்திலும் சாத்தான் இடறல் செய்யிணும் நிச்சயத்துடனே ஓடி பெறுவாய் பரிசை
காடுமேடு கண்டு அஞ்சி களைத்து நில்லாதே கூடுதல் பலனளிப்பார் குதித்ததே ஓடுவாய்
அசைந்து மாறும் எந்த லோக பந்தம் களைந்து அசைவில்லாத நாட்டை நோக்கி ஆவலாய் ஓடு
அக்கம்பக்கம் பார்த்திட்டாலோ அடைவாய் தோல்வியே எக்காளம் தொனிக்கும் வரை எதிர் நோக்கி ஓடு
ஓட்டம் முடியும் நாள் சமீபம் உள்ளம் பூரிப்பாய் பாட்டுப்பாடி ஆனந்திப்பாய் பரனின் வீட்டிலே
நல்ல போராட்டம் போராடி ஓட்டம் முடித்து வல்ல விசுவாசம் காத்தால் நீதியின் கிரீடம்