நல்ல நேரம் வந்து
nalla neram vandhu
நல்ல நேரம் வந்து அழைத்தது என்னைத் தேவனோடு இணைத்தது உள்ளம் தூய்மையோடு சிரித்தது ஊமைக் கோபம் ஓடி மறைந்தது
தினம் இயேசு பாதம் நினைத்தது மனம் மாறி நெஞ்சம் துதிக்குது
நெஞ்சில் பாவம் ஓடி மறைந்தது கர்த்தர் வார்த்தை நெஞ்சில் பதிந்தது
வார்த்தை தேவனாக இருந்தது ஜீவ நாதமாக ஒலித்தது
வானம் பூமி மாறிப் போனாலும் தேவன் வார்த்தை என்றும் மாறாது
அருள் வேதநூலைப் படித்திடு இருள் நீங்கி ஞானம் அடைந்திடு கனிவோடு பேசும் மொழியிது பணிவோடு தேடும் வழியிது