நல்ல மரம் கெட்ட கனி கொடாது
nalla maram ketta kani kodaadhu
நல்ல மரம் கெட்ட கனி கொடாது கெட்ட மரம் நல்ல கனி கொடாது நீ நல்ல நீ மரமா? இல்லை கெட்ட மரமா?
அந்ததந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும் முட்செடிகளில் அத்தி பழங்களை பறக்கிறதுமில்லை நெறிஞ்சி செடியில் திராட்சைப் பழங்களை பறிக்கிறதுமில்லை
மெய்யான திராட்சைசெடி இயேசுவின்மேல் படர்ந்திடுவோம் கனிகொடாத கோடி எதுவோ அறுத்துப்போடப்படுமே கனி கொடுக்கின்ற கொடி எதுவோ சுத்தம் செய்யப்படுமே
மரங்களின் வேரருகே கோடாரியானது இருக்கின்றது நல்லகனி கோடா மரங்களெல்லாம் அக்கினியில் போடப்படுமே நல்ல கனி தரும் மரங்களெல்லாம் தேவனோடு சேர்க்கப்படுமே