நல்ல காலம் பொறந்தாச்சு
nalla kaalam porandhaacchu
நல்ல காலம் பொறந்தாச்சு விடிவெள்ளி வந்தாச்சு-2 உன்னையும் என்னையும் இரட்சிக்க வந்தவரே ஏ. என் இயேசு மகா தெய்வமும் நீரே என் இயேசு மகா தெய்வம் நீரே
ஆனந்தமாய் பாடுவோம் கை தாளங்கள் ஒன்றாய் போடுவோம் -4
பெரு வெள்ளம் என்னை சூழ்ந்து வந்தாலும் எதிரிகள் என்னை தொடர்ந்து நின்றாலும்-2 உம் தயவு என்றும் எனைத்தாங்குமே மாறாத அன்பில் நான் முன்னேறுவேன்- நல்ல
பலநாள் முயற்சி வீணானாலும் பாதை எல்லாம் இருளானாலும்-2 உன்னோடு இருப்பவர் என்றும் பெரியவர் உனக்காய் யுத்தம் செய்ய அவர் வல்லவர்