நல் மேய்ப்பரே இக்கூட்டத்தைக்
nal meypparae ikkoottathaik
நல் மேய்ப்பரே இக்கூட்டத்தைக் கண்ணோக்கி ஆசீர்வதியும். தாசர் செய்யும் ஆராதனை அன்பாக அங்கீகரியும்.
உம் சித்தத்திற்கு ஏற்றதாய் ஜெபிக்கக் கட்டளையிடும் தேவன்பைக் காட்டி பக்தியாய் துதிக்க ஏவியருளும்.
இச்சமயத்தில் பணிவாய் ஆராதிப்போர் அனைவரும் உண்மையும் தூய்மை அன்புமாய் தொழுதுகொள்ள எழுப்பும்.
இங்கும் உமது ஆவியால் ஜனங்களுக்கு உணர்வும் நற்சிந்தையும் நீர் ஈவதால் உம் நாமம் மாட்சிமைப்படும்