நல் மேய்ப்பர் க்றிஸ்துவானவர்
nal meyppar kristhuvaanavar
1. நல் மேய்ப்பர் க்றிஸ்துவானவர் தப்பிப்போன ஆடுகளை அழைக்கும் அவர் சப்தத்தை வனாந்திரத்தில் கேட்கிறேன்.
மந்தையில் மந்தையில் நாம் கொண்டு சேர்த்து விடுவோம் திரிந்தலைவோரை யேசுவண்டையில் சேர்ப்போம்.
2. உதவி செய்ய யார் செல்வார் மேய்ப்பருக்கு ஒத்தாசையாய் குளிர் இல்லாத மந்தைக்குள் கொண்டு சேர்த்திட யார் செல்வார்?
3. எஜமான் கிறிஸ்துவானவர் மலைக் காட்டினில் கதறும் ஆடுகளைப் போய்த் தேடிட ஏவும் சத்தம் கேட்கிறேன்.