நல் மீட்பரே
nal meetparae
1. நல் மீட்பரே இந்நேரத்தில் வந்தாசீர்வாதம் கூறுமேன் ; உம் வார்த்தை கேட்டோர் மனதில் பேரன்பின் அனல் மூட்டுமேன் , வாழ்நாளிலும் சாங்காலத்தும் , ஆ , இயேசுவே , பிரகாசியும் .
2. இன்றெங்கள் செய்கை யாவையும் தயாபரா , நீர் போக்கினீர் ; எல்லாரின் பாவம் தவறும் , மா அற்பச் சீரும் அறிந்தீர் , வாழ்நாளிலும் சாங்காலத்தும் , ஆ , இயேசுவே பிரகாசியும் .
3. எப்பாவத் தீங்கிலிருந்தும் விமோசனத்தைத் தாருமேன் ; உள்ளான சமாதானமும் சுத்தாங்கமும் உண்டாக்குமேன் . வாழ்நாளிலும் சாங்காலத்தும் , ஆ , இயேசுவே பிரகாசியும் .
4. சந்தோஷம் பயபக்தியும் நீர் நிறைவாக ஈயுமேன் ; உமக்கொப்பாக ஆசிக்கும் தூய்மையாம் உள்ளம் தாருமேன் . வாழ்நாளிலும் சாங்காலத்தும் , ஆ , இயேசுவே பிரகாசியும் .
5. தரித்திரம் துன்பம் பாவத்தால் இக்கட்டடைந்த யாரையும் கண்ணோக்கும் மா கிருபையால் ; நீர் மீட்பர் , நீர் சமஸ்தமும் வாழ்நாளிலும் சாங்காலத்தும் , ஆ , இயேசுவே பிரகாசியும் . ஆமேன்