நல் மீட்பர் இயேசு நாமமே
nal meetpar yesu naamamae
1. நல் மீட்பர் இயேசு நாமமே என் காதுக்கின்பமாம்; புண்பட்ட நெஞ்சை ஆற்றவே ஊற்றுண்ட தைலமாம்.
2. அந்நாமம் நைந்த ஆவியை நன்றாகத் தேற்றுமே; துக்கத்தால் தோய்ந்த உள்ளத்தைத் திடப்படுத்துமே.
3. பசித்த ஆத்துமாவுக்கு மன்னாவைப் போலாகும்; இளைத்துப்போன ஆவிக்கு ஆரோக்கியம் தந்திடும்.
4. என் ரட்சகா என் கேடகம் என் கோட்டையும் நீரே; நிறைந்த அருள் பொக்கிஷம் அனைத்தும் நீர்தாமே.
5. மாநேசர் மேய்ப்பர் பர்த்தாவும் என் ஜீவனும் நீரே; என் தீர்க்கரும் என் ராஜாவும் ஆசாரியருமே.
6. என் நெஞ்சின் ஊக்கம் அற்பந்தான் என் அன்பில் குளிர்ந்தேன்; உம் முகம் பார்க்கும் போதோ நான் சீராகப் போற்றுவேன்.
7. இம்மையில் ஆயுள் முழுதும் உம் அன்பைக் கூறுவேன்; உம் நாமத்தால் என் சாவிலும் நான் ஆறித் தேறுவேன்.