நானுந்தன் பிள்ளையென
naanundhan pillaiyena
நானுந்தன் பிள்ளையென ஆனதும் நீரெந்தன் தந்தையென ஆகினீர் யாரெந்தன் வேதனையைப் போக்குவார் என் இயேசுவே என் துன்பம் நீக்குவார்
அப்பா பிதாவே என்று தினமும் நான் அழைத்தேதான் கூப்பிடுவேன் தப்பாமல் வந்து என் துதியை நீரும் ஏற்றுக்கொள்ளும் தேவனே
ஸ்தோத்திரம் சொல்லிடும் வேளையில் என் மீட்பரே எனை வந்து தேற்றிவிடும் நீர் தந்த தாலந்தைக் கொண்டே நானும் பாமாலை பலநூறு பாடவேணும்