நானோவெனில்
naanovenil
நானோவெனில்… துதியின் சத்தத்தோடு பலியிடுவேன் நானோவெனில்… எக்காள தொனியோடு ஸ்தோத்தரிப்பேன் (2) நானோவெனில்…பலியிடுவேன் நானோவெனில்…ஸ்தோத்தரிப்பேன் (2)
Halleluiah Halleluiah Halleluiah….4
1. என் இதயம் சோர்ந்து போகையில் கர்த்தரைத் துதிப்பேன் வேண்டுதலின் சத்தம் கேட்டு கிருபை அளித்தார் (2) பாடுவேன் பலியிடுவேன் நடனமாடுவேன் -4
2. கர்த்தரே என் இரட்சகர் அவர்மேல் நம்பிக்கை வைப்பேன் என் மீட்பர் உயிரோடிருக்கிறார் குறை ஒன்றுமில்லையே (2) பாடுவேன் பலியிடுவேன் நடனமாடுவேன் -4
3. என் ஆத்துமா உந்தன்மேலே தாகமாயிருக்கும் உம்முடைய செட்டைகள் மறைவில் களிகூர்ந்திருப்பேன்(2) பாடுவேன் பலியிடுவேன் நடனமாடுவேன் -4
4. வல்லமையும் பராக்கிரமும் உள்ளவர் தேவன் எதிரிகள் மேல் நியாயந்தீர்த்து வெற்றிகள் தருவார்(2) பாடுவேன் பலியிடுவேன் நடனமாடுவேன் -4