நானோ உம் பிள்ளை
naano um pillai
நானோ உம் பிள்ளை எனக்கில்லை இனி தொல்லை தேவா உம் சொல்லை மறக்க போவதுமில்லை போகுமிடமெல்லாம் உம் அன்பிற்கேதுமில்லை
ஆகாயம் பூலோகம் அதில் காணும் எல்லாமே இயேசுவின் ஆளுகைதான் உலகத்தில் அவராலே உருவானதெல்லாமே ஒவ்வொன்றும் ஆச்சரியம்தான்
அன்பான இயேசு என் அரணான இயேசு என் வாழ்வின் நான் கண்ட உயிரான இயேசு
எத்தனை பாவங்கள் நான் செய்த போதும் மறந்தென்னை மன்னிப்பவர் எது வந்த போதிலும் புது வாழ்வு எனக்கு தருகின்ற நேசரவர் அன்பான இயேசு என் அரணான இயேசு என் வாழ்வில் நான் கண்ட உயிரான இயேசு