நாங்கள் இயேசுவின்
naangal yesuvin
நாங்கள் இயேசுவின் சந்ததி தலைமுறைகள் தோறுமே நேசர் இயேசுவை சேவிக்கும் ஆசாரியக் கூட்டமே
வானத்தின் நட்சத்திரம் நாங்களே வாக்குதத்தத்தின் ஜனங்களே பலுகிடுவோம் நாங்கள் பெருகிடுவோம் பூமியை நிரப்பிடுவோம் நாங்கள் பலுகிடுவோம் நாங்கள் பெருகிடுவோம் பூமியை நிரப்பிடுவோம்
1. என் சபையைக் கட்டுவேன் என்றவர் எங்களை அனுதினம் கட்டுவார் பாதாள வல்லமைகள் ஒருபோதும் எங்களை மேற்கொள்வதில்லையே
2. என் இயேசு ராஜாவின் கெம்பீரம் எங்களின் நடுவில் இருக்கிறதே எங்கள் பட்சத்தில் அவர் இருக்க எதிரிகள் ஜெயங்கொள்வதில்லையே
3. என் மேல் விழுந்தால் நொறுக்கிடுவார் எதிராய் எழும்பினால் நசுக்கிடுவார் சபைகள் வளர்ந்து பெருகிடுமே தேசம் எங்களால் நிறையுமே