நானே வானினின்று இறங்கி வந்த
naanae vaaninindru irangi vandha
நானே வானினின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான்
எனது உணவை உண்ணும் எவரும் பசியை அறிந்திடார் ஆ என்றும் எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடார்
அழிந்து போகும் உணவிற்காக உழைத்திட வேண்டாம் ஆ . . என்றும் அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் உணவிற்கே உழைப்பீர்
மன்னா உண்ட முன்னோர் எல்லாம் மடிந்து போயினர் ஆ . . . எங்கள் மன்னன் உன்னை உண்ணும் | எவரும் மடிவதே இல்லை