நானே ஒரு காணிக்கைப் பொருளாக
naanae oru kaanikkaip porulaaga
நானே ஒரு காணிக்கைப் பொருளாக உம் பீடத்தின் முன் வந்தேன் பணிவாக தந்தையே ஏற்பாயோ பலியாக ( 2 ) சிந்தித்தேன் சிந்தித்தேன் வெகுவாக சிந்தையில் படவில்லை உயர்வாக தந்திட்டேன் என்னையே முடிவாக 2 தந்தையே ஏற்பாயோ பலியாக
2 . வாழ்கிறேன் வாழ்கிறேன் உனக்காக உனக்கின்றி நான் இங்கு எதற்காக ( 2 ) அர்ப்பணம் செய்கிறேன் முழுதாக தந்தையே ஏற்பாயோ பலியாக
படைத்திட்டாய் படைப்பை பலவாக படைப்பு அனைத்தும் எமக்காக ( 2 ) உன் அன்பு கொடைக்கென்னை பரிசாக - 2 தந்தையே ஏற்பாயோ பலியாக