நானே மெய்யான திராட்சை செடி
naanae meyyaana thiraatsai sedi
நானே மெய்யான திராட்சை செடி கனித்தரவே நாம் கொடிகளென்றால் செழிப்புடன் படர்ந்து ஓங்கிடுவோம் வார்த்தையில் நிலைத்து வளர்ந்திடுவோம்
தனித்திடும் கொடியில் கனிகள் இல்லை செடியினில் நிலைத்தால் கனிகள் உண்டு இயேசுவில் என்றும் நிலைத்திருந்தால் குறைவில்லா கனிகள் மிகுந்திடுமே
நிறைவுடன் கனிகளைத் தந்திடவே பரிவுடன் அவரே சுத்தம் செய்வார் சத்திய உபதேசம் ஏற்பதினாலே நித்திய சுத்தம் நிலைத்திடுமே
ஆவியின் கனியோ அன்பு சந்தோஷம் நீடிய பொறுமை நற்குணமே சாந்தம் தயவு நல்விசுவாசம் இச்சை அடக்கம் இவைகளாகும்
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A D E A A F#m A7 D A D E7 A A E A F#m C#7 A Bm D E7 A A E A F#m C#7 A Bm D E7 A A E A F#m C#7 A Bm D E7 A