நான் வணங்கும் தெய்வமே
naan vanangum theyvamae
நான் வணங்கும் தெய்வமே - எம்மை வழி நடத்தும் இயேசுவே (2) இந்த மானிலத்தை நொடியிலே - வகுத்த மாசில்லா ஜோதியே (2)
பாதையைக் காட்டியே உலகைக் காத்திடும் இயேசுவே (2) ஆயனே ஐயரே - எமக்கு ஆறதல் தாருமே (2)
தேனிலும் இனியது உம் நாமம் தெரிந்து தான் பாடினேன் (2) வானிலும் மண்ணிலும் - உமது வல்லமை விளங்குதே (2)
நீதியின் தேவனே எங்கள் நெஞ்சத்தில் வாழுமே (2) ஆதியில் வார்த்தையாய் - வந்த ஆண்டவர் இயேசுவே (2)