நான் வாழ்வது உமக்காக
naan vaazhvadhu umakkaaga
நான் வாழ்வது உமக்காக உமது ஊழியம் செய்வதற்காக
உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட - 2 ஆசையுடன் தினம் ஓடுகிறேன்
உடைந்து போன எந்தன் கூடாரத்தையே உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே பாழானவைகளை சீர்படுத்திவிட்டீர்-2 பயிர் நிலமாய் என்னை மாற்றிவிட்டீரே
தொலைந்து போன என்னை தேடி வந்தீரே உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே ஆகாதவன் என்று தள்ளின என்னை மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீர்