நான் வாழும் வாழ்க்கை
naan vaazhum vaazhkkai
நான் வாழும் வாழ்க்கை நீர் தந்த ஈவு எந்நாளும் உம்மையே ஆராதிப்பேன்-2 உள்ளத்தின் ஏக்கம் உயிர் வாழும் நோக்கம் எந்நேரம் எந்நாளும் நீர் தானைய்யா (நீர் இயேசய்யா )-2-நான் வாழும்
சுயத்தை நீக்கி உம் சிலுவையை நோக்கி எந்நாளும் ஊழியம் செய்யனுமே நான் வாழும் வாழ்க்கை அடியோடு வெறுத்து உமக்காக என்றும் வாழனுமே-நான் வாழும்
சுவிசேஷ பாரம் பரலோக சிந்தை அனுதின உணவாய் மாறட்டுமே உம் இராஜ்ஜியம் கட்டும் வாஞ்சையினாலே எந்தன் உள்ளம் நிறையட்டுமே-நான் வாழும்
காத்திருப்பேன் உமக்காகவே முகமுகமாய் உம்மை சந்தித்திட-3