நான் உந்தன் குருசினில் மறைவேனே
naan undhan kurusinil maraivenae
நான் உந்தன் குருசினில் மறைவேனே ஆறதல் வேறெனக் கெங்கும் மில்லை பார்தலத்தில் எந்தன் பாவ பரிகாரி இயேசு என் இரட்சகர் அல்லோ
உம் சித்தம் என் வாழ்வில் செய்ய என் உள்ளம் வாஞ்சிக்குதே ஆவி ஆத்மா தேகம் முழுவதும் கழுவி அனுதினமும் காத்திடுமே
நாயகன் என் இயேசு வேகம் தூதர் கூட்டமுடன் வாரும் தேவா எக்காள தொனியுமாய் அடியேனை உம்முடன் சேர்த்திடவே
மகிமையில் உம்முகம் காண்பேன் நான் மாறுவேன் இயேசுவைப் போல் உன்னத ராஜ்யம் சேர்ந்திடுவேனே மேசியா கிருபையாய் அளித்திடுவார்