நான் செய்த பாதகம் எப்படிப்போம்
naan seydha paadhagam eppadippom
1. நான் செய்த பாதகம் எப்படிப்போம் - பாவ நாசர் எவ்விட முண்டு ஸ்ரீ இயேசு இரட்சகர் பாவிகட்காய் - குருசில் பிராணனை விட்டதுண்டு
கொடும் பாவி என்னை ரட்சிக்க இரட்சிக்க (2) திரு சிரசில் அவர் முள் முடி தரித்தார் கொடும் பாவி என்னை ரட்சிக்க
2. உலகத்தின் பாவிகள் மோட்சம் சேர - அவர் கண்ணின் நீர் விட்டாரல்லோ , தாகமுள்ளவர்கள் ஜீவ ஆற்றில் - தாகம் தீர்ப்பதற்காக வரட்டும் - கொடும்
3. பாவியா மென்னுடைய பாவமேற்று மனஸ்தாபம் வந்தபோது கல்லுள்ளம் நீக்கி தன் ஆவியினால் என் உள்ளம் திருப் பாதை சேர்த்தார் - கொடும்
4. எந்தப் பாவிகட்கும் இரட்சகர் தான் அவர் சத்திய கர்த்தனல்லோ பாவத்தை வெறுத்து கர்த்தர் நீ - நம்பு மோட்சத்தில் சேர்ப்பார் உன்னை - கொடும்
5. இந்தப் பாக்கியம் தந்த இயேசுவுக்கு பதில் நான் என்ன கொடுக்கவேண்டும் என் பூர்ண சக்தியோடு அவர் நாமத்தை என்றும் வாழ்த்திப் புகழ்ந்திடுவேன் - கொடும்