நான் பயப்படும் நாட்களில்
naan payappadum naatkalil
நான் பயப்படும் நாட்களில் உம்மை நம்பிடுவேன் என் அச்சத்தின் நேரத்தில் உம்மை சார்ந்து கொள்வேன்-2
என் அலைச்சல்களை அறிந்தவரே என் கண்ணீரையும் காண்பவரே-2
என் கண்ணீர் அனைத்தையும் துருத்தியில் வைத்தவரே என் கண்ணீரை எல்லாம் கணக்கில் வைத்தவரே-2-நான் பயப்படும்
1.என்னை அழிக்க நாள்தோறும் நினைத்த எதிரியின் கையில் விழாமல் காத்தீர்-2 சத்ருக்கள் முன்பு பந்தியை வைத்து எண்ணையினாலே அபிஷேகம் செய்தீர்-2
2.எனக்காக யாவையும் செயத்து முடித்த தகப்பன் இருக்க குறை ஒன்றும் இல்லை-2 நான் நம்பும் மனிதர் நிரந்தரம் இல்லை நீர் என்னோடிருக்க பயம் ஒன்றும் இல்லை-2