நான் பாடிக்கொண்டேயிருபேன்
naan paadikkondeyiruben
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்-என் இயேசுவின் நாமத்திலே ஆவியில் நிறைவாகி-தீர்க்க தரிசனங்கள் சொல்வேன்
தேடியே வந்து என்னை-திருக் கரங்களினால் அணைத்தார் பாடுகள் அனுபவித்து-பாவச் சேற்றினில் மீட்டவரை
தேவனின் திருப்பாட்டு-எந்தன் ஆவியைத் தாலாட்டும் இயேசுவின் திருவசனம்-ஞானப் பாலாய் அமுதூட்டும்
காரிருள் சூழ்ந்தாலும்-ஜீவ ஒளியென்னை வழி நடத்தும் சத்திய வசனம் வந்து-என்னை தழுவியே காத்துக்கொள்ளும்