நான் நிற்பதும் இயேசுவின்
naan nirpadhum yesuvin
நான் நிற்பதும் இயேசுவின் கிருபையே நான் உயிருடன் வாழ்வதும் கிருபையே
மலைகள் விலகினாலும் பருவதங்கள் பெயர்ந்தாலும் என்னை விட்டு விலகாது கிருபையே என்னை உயிருடன் காத்திடும் கிருபையே
1. அக்கினியில் நடந்தாலும் தண்ணீரில் மிதந்தாலும் காற்று அடித்தாலும் மழை வந்தாலும் என்னை காத்திடும் தேவ கிருபையே என்னைத் தாங்கிடும் இயேசுவின் கிருபையே
2. பள்ளத்தாக்கில் நடந்தாலும் காரிருள் சூழ்ந்தாலும் கீழே விழுந்தாலும் தாங்கி பிடித்திடும் உன்னத தேவ கிருபையே என்னைத் உயர்த்திடும் இயேசுவின் கிருபையே
3. நேசித்தோர் வெறுத்தாலும் நண்பர்கள் மறந்தாலும் நம்பினோர்கள் என்னை கைவிட்டாலும் மறக்காத தேவ கிருபையே என்னை அனைத்திடும் இயேசுவின் கிருபையே