நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும்
naan nirpadhum nirmoolamaagamal iruppadhum
நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும் என் மீது நீர் வைத்த கிருபையே -2 உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால் - 2 உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால் -2 உசுரோடு இருக்குறேன் குடும்பமா இருக்குறேன் -2 கிருபையே கிருபையே -2 என் மீது நீர் வைத்த கிருபையே -2
1) ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்து - 2 ஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை -2 தள்ளாடும்போது தாங்கிடும் கிருபை - 2 தவறிடும் போது தூக்கிடும் கிருபை -2 கிருபையே கிருபையே -2 என் மீது நீர் வைத்த கிருபையே - 2
2) பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன் - 2 தேடி வந்து மீட்டது உம் கிருபை -2 கறை திரை போக்கி பரிசுத்தமாக்கி - 2 உமக்காக வாழ வைத்ததும் கிருபை -2 கிருபையே கிருபையே -2 என் மீது நீர் வைத்த கிருபையே - 4