நான் நம்பும் தெய்வம் இயேசு
naan nambum theyvam yesu
நான் நம்பும் தெய்வம் இயேசு என்னை வழி நடத்தும் தெய்வம் இயேசு பண்படுத்தும் தெய்வம் இயேசு என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு-2
1.ஆபத்திலே என்னோடிருந்தீர் (என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர்-2 சோதனையிலும் என்னோடிருந்தீர் சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர்-2-நான் நம்பும்
2.ஜீவனை நீர் எனக்கு தந்தீர் (உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர் பவமெல்லாம் நீக்கி விட்டீர் புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர்-2 மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர் சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்-நான் நம்பும்