நான் நம்பி வந்தேன் ஏசு நாதா
naan nambi vandhen esu naadhaa
நான் நம்பி வந்தேன் ஏசு நாதா என்னை ஏற்றுக் கொள்ளும் உம்மையன்றி மீட்பரில்லை உலக இரட்சகர் - நீரே
1. எந்தன் பாரம் தாங்கிடவா ஏதும் என்னில் பலனுண்டோ யாரிடம் சொல்வேன் என்னை விசாரிப்பாரில்லை என் பாவ பாரம் நீக்கிடும் தேவா ஏசுவே இரங்குமே - என்
2. துன்பம் தொல்லை துயரங்களும் தாங்கொண்ணாத் நோய் பிணியும் சோதனைகளும் என்னை நெருக்கி வாட்டினும் சுகம் தாரும் என்னை விடுதலையாக்கும் சர்வ வல்லவரே - நீர்
3. உன்னத அன்புள்ளவர் உண்மை நீதி உடையவரே இந்த ஏழைக்காய் நீர் பரிந்து பேசும் - நீர் இருளான வாழ்வில் வெளிச்சம் தாரும் இயேசு இரட்சகரே - என்
4. ஏசுவே உம் இரத்தத்தால் என் மனதை கழுவிடுமே மன்னிப்படைந்தே பரிசுத்தம் ஆக - பாவ என் பாவம் யாவும் அறிக்கை செய்தேன் என்னை மீட்ட இருளும் - இன்று
5. கல்வாரியை காண்கையிலே கல்மனமும் உருகிடுதே எத்தனை பாடோ ஈன சிலுவை மீதிலே - உமக் எனக்காக யாவும் செய்து முடித்தே ஏசுவே மரித்தீர் - என்
6. என்னை மீட்க மரித்தவர் என்னோடிருக்க உயிர்த்தவரே தேவ ராஜ்யம் அதை அடைந்து வாழ தினம் தேடி உம் வேண்டுகிறேன் தாரும் பரம்பொருளே - என்றும்