நான் நடந்து செல்கிறேன்
naan nadandhu selgiren
நான் நடந்து செல்கிறேன் என்னை தொடர்ந்து வருகிறீர் என் கால்களுக்கு பெலனானவர் என் பாதைகளில் வெளிச்சமானவர்
உம் நாமம் உயர்ந்தது உலகினிலே சிறந்தது அதை சொல்லும் பாக்கியம் எனக்கு தானே கிடைத்தது உம் நாமம் சொல்ல ஊரெங்கும் செல்வேன் உன்னதரே உம் பணி ஓயாமல் செய்வேன்
வல்லமை உள்ளது வழுவாமல் காப்பது வார்த்தையை அனுப்பியே குணமாக்குவது வார்த்தையை நம்பி வாழ்ந்து துதிப்பேன் வல்லமையால் நிறைந்து மகிழ்ந்திருப்பேன்
அதிசயமானது அன்பரே உம் நாமமது அதை சொல்ல என்னை நீர் தெரிந்துகொண்டீர் ஊரெல்லாம் சென்று நானும் உரைத்திடுவேன் உத்தமரே உம் நாமம் உயர்த்திடுவேன்