நான் நடக்கும் பாதையில்
naan nadakkum paadhaiyil
நான் நடக்கும் பாதையில் உள்ள ஏற்ற இரக்கங்கள் அறிந்து என்னை நடத்தும் எனக்காய் நிற்பவரே யாரும் அறியாத என்னுடைய உள்ளத்தின் ஆழங்களை தெரிந்து என்னை தேற்றும் என்னுள் இருப்பவரே - 2
நீரே மாறாதவர் - 3 என்னை என்றும் தல்லாதவர்
1. உலகின் உறவுகள் மாறி போனாலும் நீ நம்பின நண்பர்கள் கைவிட்டாலும் - 2 உன்னை தேடி வந்த நேசர் இங்கே உனக்கு உண்டு அவரை நம்பின யாரும் வெட்கப்பட்டு போனதில்லை - 2
2. சுற்றிலும் சூழ்நிலை உன்னை எதிர்த்தாலும் தோல்வியின் பாதையில் நீ தொடர்ந்தாலும் - 2 உனக்காய் யுத்தம் செய்யும் கர்த்தர் இங்கே உண்டு அவரை நம்பின யாரும் வெட்கப்பட்டு போனதில்லை - 2