நான் இருப்பது தேவ கிருபை
naan iruppadhu deva kirubai
நான் இருப்பது தேவ கிருபை நான் வாழ்வது தேவ கிருபை கிருபை (2) தான் அது மாறா கிருபை தான்
1.நிர்மூலமாகாமல் இருப்பதும் கிருபை கால் இடறாமல் காப்பதும் கிருபை நீர் என்மேல் வைத்த கிருபை மாறா
2.நோவா கண்களில் கிடைத்த கிருபை அழிவில் இருந்து காத்த கிருபை கல்வாரி சிலுவையில் காட்டின கிருபை பாவியாம் என்னையும் மீட்ட கிருபை
புழுதியிலிருந்து தூக்கின கிருபை குப்பையிலிருந்து உயர்த்தின கிருபை கன்மலைமேலே நிறுத்தின கிருபை ஒவ்வொரு நாளும் நடத்தின கிருபை
பலவீன நேரத்தில் தாங்கின கிருபை சோதனை நேரத்தில் சூழ்ந்திட்ட கிருபை மலைகள் விலகினாலும் மாறா கிருபை என்றும் தாங்கும் நித்திய கிருபை