நான் இங்கோர் அன்னியன் இவ்வுலகில்
naan ingor anniyan ivvulagil
1. நான் இங்கோர் அன்னியன் இவ்வுலகில் லோகம் ஓர் பாழ்நிலம் விண் என் வீடு துன்பங்கள் வருத்தங்கள் நிறைந்த லோகம் விட்டு என்று செல்வேன் விண் வீட்டிற்கு?
2. துன்பங்கள் கஷ்டங்கள் அங்கேயில்லை வியாதி மரணம் அங்கேயில்லை சீக்ரம் இக்கஷ்டம் பறந்து செல்லுமே அஜ்ஜோதி நாட்டை நாம் சேரும்போது.
3. அங்கென் மீட்பர் பக்கம் நான் ஜீவிப்பேன் அவரைத் துதிப்பேன் என்றென்றைக்கும் அங்கே நான் ஆவலாய் நேசிப்போரைக்கண்டு மகிழ்ந்து துதிப்பேன் அவ்விண் நாட்டில்.