நான் என்ன செய்தேன்
naan enna seydhen
நான் என்ன செய்தேன் என் இயேசுவுக்கு அவர் எனக்கு செய்தார் அனைத்தையுமே - 2
1. நம்பாவத்தை அறிக்கை பண்ணச் சொன்னார் அந்த பாவத்தை விட்டுவிடவும் சொன்னார் பரிசுத்தமாக்குவேன் என்றுரைத்தார் மகனாக மகளாக ஏற்றுக்கொண்டார் - 2 (நான்)
2. நம் பாவங்கள் அனைத்தையும் சுமந்து தீர்த்தார் நம் சாபத்துக்கெல்லாம் சாபமானார் சாத்தானின் அதிகாரத்தை முறியடித்தார் நித்திய ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொள்வார் - 2
3.ஆறு நாள் நமக்காக (வேலை செய்ய சொன்னார்) ஏழாம் நாள்(முதல் நாள்) கர்த்தருக்கு சபை கூடச்சொன்னார் வருத்தப்படுபவர்களே வாருங்கள் என்றார் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்