நான் என்றும் இயேசுவே
naan endrum yesuvae
நான் என்றும் இயேசுவே உம்மை வாழ்த்துவேன் நீர் என்னை சேர்த்திட வேகம் வாருமே அனுதினமும் பாடுவேன் பரிசுத்தரை வாழ்த்துவேன் பாடுவேன் வாழ்த்துவேன் அனுதினமும் வாழ்த்தி பாடுவேன் லல ல லல லா லா ல
உம்மை போல என்னில் அன்பு கூர்ந்திட இம்மையினிலே யாருமில்லை தேவனே உந்தன் அன்பை எண்ணி கவி பாடினால் எந்தன் கண்கள் கண்ணீரால் நிறையுதே கவலை மறந்து கஷ்டம் மறந்து இதயம் துதிபாடும், அனுதினமும்
கஷ்டம் பாடு இல்லாத ஜீவியம் துஷ்டர் யாரும் இல்லாத இராஜ்ஜியம் அங்கே செல்லதானே இங்கு வாழ்கிறேன் அதற்காக தினந்தோறும் ஏங்கினேன் கவலை மறந்து கஷ்டம் மறந்து இதயம் துதிபாடும், அனுதினமும்
உந்தன் கரம் என்னை வழி நடத்துமே எந்தன் வழி விலகாது காக்குமே உன்னதத்தில் உம்மோடு அமர்த்துமே உந்தன் அண்டை என்னைகிட்டி சேர்க்குமே கவலை மறந்து கஷ்டம் மறந்து இதயம் துதிபாடும், அனுதினமும் உம் சித்தம் போல்