நான் அழைக்கும் போது
naan azhaikkum podhu
நான் அழைக்கும் போது அருகில் வந்து அணைக்கும் தெய்வமே உம்மை வாழ்த்திபாட வார்த்தை இல்லையே நான் கலங்கி நிற்கும் நேரத்திலே கரம் பிடிக்கிறீர் உம்மை வணங்குகிறேன் இயேசு ராஜானே
பல்லவி
வாழ்த்திபாட வார்த்தைகள் இல்லையே வணங்குகிறேன் உம்மையே-2
ஊழிய பாதையிலே நீர் என்னை நடத்தினீரே சோர்ந்திட்ட நேரத்திலே துணையாய் வந்தீரைய்யா-2
என்னை தினம் நினைத்து கிருபையை பொழிந்து சிறகுகளாலே மூடினீரே
என்னை தினம் நினைத்து கிருபையை பொழிந்து கரங்களினாலே தாங்கினீரே
பல்லவி
வாழ்த்திபாட வார்த்தைகள் இல்லையே வணங்குகிறேன் உம்மையே-2
என்ன தான் நடந்திடுமோ எப்படி தான் முடிந்திடுமோ என்று நான் பயந்திருந்தேன் ஜெயத்தை தந்தீரைய்யா-2
நீர் செய்த நன்மைக்காய் என்ன நான் செய்திடுவேன் உம் நாமம் பாடி துதித்திடுவேன்
நீர் செய்த நன்மைக்காய் என்ன நான் செய்திடுவேன் ஜீவன் பிரியும் வரை துதித்திடுவேன்
பல்லவி
வாழ்த்திபாட வார்த்தைகள் இல்லையே வணங்குகிறேன் உம்மையே-2
எத்தனை அற்புதங்கள் எத்தனை அதிசயங்கள் என் வாழ்வில் நீர் செய்த கோடான கோடி நன்மைகள்-2
குறைவுகள் நீக்கி நிறைவாய் மாற்றி உம் மகனாக வரைந்து கொண்டீர்
குறைவுகள் நீக்கி நிறைவாய் மாற்றி மகிமையில் உம்மோடு சேர்த்து கொள்வீர்
பல்லவி
வாழ்த்திபாட வார்த்தைகள் இல்லையே வணங்குகிறேன் உம்மையே-2
நான் அழைக்கும் போது அருகில் வந்து அணைத்த தெய்வமே உம்மை வாழ்த்திபாட வார்த்தை இல்லையே நான் கலங்கி நின்ற நேரத்திலே கரம் பிடித்தீரே உம்மை வணங்குகிறேன் இயேசு ராஜானே