நாம் விழுந்து போகாதபடிக்கு
naam vizhundhu pogaadhabadikku
நாம் விழுந்து போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம் நாம் இழந்து போகாதபடிக்கு கவனமாய் ஓடி முடிப்போம்-2
பரிசுத்த வாழ்வை இழந்து போகாதே பந்தய பொருளை இழந்து போகாதே பரலோகத்தை இழந்து விடாதே பரிசுத்தம் காத்துக் கொள்ளவோம்-2
1.பெற்றுக் கொள்ள தக்கதாய் பந்தய சாலையில் ஓடுவோம் ஜீவ கிரீடம் பெற்றிட தேவ சித்தம் நாம் செய்குவோம்-2-பரிசுத்த
2.இச்சையடக்கத்தோடே முன்னேறி நாம் செல்லுவோம் வாக்குத்தத்த தேசத்தை தவறாமல் சுதந்தரிப்போம்-2-பரிசுத்த
3.அக்கம் பக்கம் பார்க்காமல் ஆண்டவர் இயேசுவை நோக்குவோம் ஆயுட்காலம் முடியும் வரை அவருக்காகவே வாழுவோம்-2-பரிசுத்த