நாம் நன்றியோடே
naam nandriyodae
நாம் நன்றியோடே ஒன்று கூடிப் பாடுவோம் - மகிபனையே
1. அருணோதயம் போல் அவனியில் உதித்தார் அற்புதத் திருமறை யானவரே அருள் நிறைந்தவர், இருளதை நீக்கிடவே அன்பு மயமாகியே - நாம்
2. துதியால் மிகுந்த தூதர்கள் பாட புல்லணையமர்ந்த பொற்பாலகனை மகிலம் ஓங்கிடும் மன்னர்கள் தேடிடவே மகிமை துலங்கிட்டதே - நாம்
3. மனுவானவராய் மாண்புடையதிலே மறை புகழ் தீர்க்கர் உரை மாறிடாது. மாந்தர் மேல் பாசமாய் தாழ்மை உருவெடுத்தார் சாந்தமுள்ள காந்தனாம் - நாம்
4. சிறையாயிருந்த மாந்தரை யெடுக்க சகல நோய் பிணிகளும் நீக்கிடவே சிறுமையுற்றோருக்குச் சுவிசேஷமறிவித்திட சுதனவதரித்தனரே - நாம்
5. திரு ஆதரவாகத் திருப்பணி செய்ய திருச்சபை தினம் தினம் ஓங்கிடவே திங்கள் ஒளி போல் தங்கிடத் திரு வரங்கள் எங்கும் ஜொலித்திடவே - நாம்