நாம் கூடி கர்த்தரின் ஆசீர்வாதம் கேட்க
naam koodi kartharin aaseervaadham ketka
1. நாம் கூடி கர்த்தரின் ஆசீர்வாதம் கேட்க விரைந்து தம் சித்தத்தை அறிவிப்பார் வருந்தினோர் கவலைகளை களைந்தோராய் அவரைத் துதி செய்து பாடிப் புகழ்வோம்.
2. பரலோக தேவன் நம் அருகில் நின்று அபிஷேகம் பண்ணி ஆசீர்வதிப்பார் ஆம் ஆரம்ப முதலாய் வெற்றி சிறப்போமே கனம் மகிமையும் கர்த்தருடையது.
3. வெற்றி சிறந்த கர்த்தாவே நீர் எங்களை பாதுகாத்து ரட்சிக்கும் காவலரே உம்திருச்சபையினை துன்பங்களின் நாளில் பிழைக்கும்படி காத்து விடுவித்திடும்.