நாம் எல்லோரும் ஒன்றாய்
naam ellorum ondraay
1. நாம் எல்லோரும் ஒன்றாய் கூடுவோம், நாதனைக் கொண்டாடிப் பாடுவோம் நானிலத்தில் நம்மைச் சேமமோடே காத்த நாயகர்க்கு ஸ்தோத்திரம் நன்றியோடு பாடுவோம்
அல்லேலூயா கீதம் பாடுவேன்! அல்லல் எல்லாம் அற்று போகுமே! வல்லவர் நமக்கு நல்லவர் உண்டு, எல்லா தினங்களும் ஈந்திடுவதாலேயே,
2. வாத்திய கோஷத்தோடே ஏகமாய் வானவர் துதிக்கும் நாதனை வாழ்த்தும் திருப்பாதம் வணக்கம் நாம் தேடி வன்மையுடன் இன்றும் என்றும் சுடிப்பாடுவோம்.
3. இன்னல் என்று ஏறி வந்தாலும் எல்லாம் நீங்கி இன்பம் ஈவாரே, ஏழைகளின் பானம் ஏதும் சுமக்கின்ற இயேசு ராஜா பாதம் என்றும் கூடிப் பாடுவோம்.
4. அன்றன்றுள்ள அவசியம் அறிந்து வல்லநாதன் வாக்குரைப்படி, ஆதரித்துக் காக்கும், அன்னையாம் நம் இயேசுவை! ஆர்ப்பரித்துக்கடி அல்லேலூயா பாடுவோம்.
5. சத்துருவின் அக்கினியாஸ் திரங்களால் சக்தியற்றுச் சோர்வு வந்தாலும், சத்துருவை ஜெயித்த கர்த்தர் நமக்குண்டு, சித்தர் கூட்டம் சேர்ந்து நித்தம் துதி பாடுவேன்.
6. சர்வ வல்ல சிருஷ்டி கர்த்தருக்கே சதா கனம் துதி பெருகவே, சர்வமும் துதிக்கும், சர்வ வல்லவர் கோ சதா துதி ஸ்தோத்திரம், அல்லேலூயா பாடுவோம்!