நாம் ஆராதிக்கும் தேவன்
naam aaraadhikkum devan
நாம் ஆராதிக்கும் தேவன் ஜீவனுள்ளவர் ஜீவனுள்ளவர்ஜீவனுள்ளவர்- அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
அவர் ஒரு வார்த்தை சொன்னால் காற்றடங்கும் காற்றடங்கும் அவர் மறு வார்த்தை சொன்னால் கடல் அடங்கும் கடல் அடங்கும் மனுஷனால் கூடாதது என் தேவனால் கூடுமே
அவர் பாடையைத் தொட்டால் உயிர் பிழைக்கும் உயிர் பிழைக்கும் அவர் ஆடையைத் தொட்டால் சுகம் கிடைக்கும் சுகம் கிடைக்கும் மனுஷனால் கூடாதது என் தேவனால் கூடுமே
அவர் அனுதினம் செய்வார் அதிசயங்கள் அதிசயங்கள் நீ அவரிடம் வந்தால் நீங்கிவிடும் உன் பயங்கள் உன்பயங்கள மனுஷனால் கூடாதது என் தேவனால் கூடுமே