நாளானது அதை விளங்கப்பண்ணும்
naalaanadhu adhai vilangappannum
நாளானது அதை விளங்கப்பண்ணும் எத்தன்மை என்பதை வெளிப்படுத்தும் நான் செய்வதெல்லாம் மண்ணென்று நகைத்தோரை அந்நாளில் பொன்னென்று கேட்க செய்வீர்
உமக்காக யாவையும் சகிப்பேன் நீர் ஈந்தும் பெலன் கொண்டு துதிப்பேன்
என்னோடு வந்தவர் உண்டு எனைவிட்டு போனோரும் உண்டு நடுவோரல்ல பாய்ச்சுவோரல்ல விளைச்சலை உம்மாலே கண்டேன்
குதிரையை நம்புவோர் உண்டு இரதத்தை சார்ந்தவர் உண்டு செல்வத்தை நம்புவோர் உண்டு செல்வாக்கை சார்ந்தவர் உண்டு பலத்தாலல்ல பராக்கிரமமல்ல ஆவியால் ஜெயமதை அடைந்தேன்
தரிசனம் தந்தவர் நீரே ஒத்தாசை தருபவர் நீரே நான் காணும் கானான் வெகு தூரமானாலும் நிச்சயம் கொண்டு செல்வீரே